கடற்கரை நோக்கி நான்
என் கரம் பற்றி என்னவள்
கல்லூரி முடிந்த பின்
அவளைக் காண்பதென்றால்
பௌர்ணமி தரிசனமே
ஆயிரம் பொய் பேசி வந்திருப்பாள்
ஆனாலும் குற்றமாய் தெரியவில்லை
கல்லூரியில் சண்டையிலே வளர்ந்த காதல்
பிரிவிலே வைராக்கியம் ஆயிற்று
அவள் விழி நோக்கையில் விண்மீன்கள் மின்னுகின்றன
அவள் நாசிக்காற்றிலே கதிர் வீச்சு தாக்குகிறது
தோளிலே சாய்கையில் கதாநாயகனாக பூரிக்கிறது மனசு
தலை கோதும் அவள் விரல்கள் இதயத்தை வருடுகிறது
அந்திவானம் காட்டும் வர்ணஜாலம்-தொற்குது அவள் சிரிப்பில்
பொங்கிவரும் அலைகள் மௌனமாகிறது அவள் காலடியில்
பிரிவிலே வரம் பெற்றாளோ
பிரியவே முடியவில்லை – அவளை
15 comments:
///அவள் விழி நோக்கையில் விண்மீன்கள் மின்னுகின்றன
அவள் நாசிக்காற்றிலே கதிர் வீச்சு தாக்குகிறது
தோளிலே சாய்கையில் கதாநாயகனாக பூரிக்கிறது மனசு
தலை கோதும் அவள் விரல்கள் இதயத்தை வருடுகிறது///
....... அருமையான வரிகள். :-)
அவள் நாசிக்காற்றிலே கதிர் வீச்சு தாக்குகிறது//
அடடே என்ன அற்புதமான வரிகள். அவளின் பாதிப்பு கவிதையில் நன்றாகத் தெரிகிறது.
தங்களின் முதற் கவிதையை விட இது மிக மிக நன்றாக இருக்கிறது.
நன்றி சித்ரா .:-)
நன்றி கமல் .
arumayana varigal
நன்றி LK
//தோளிலே சாய்கையில் கதாநாயகனாக பூரிக்கிறது மனசு
தலை கோதும் அவள் விரல்கள் இதயத்தை வருடுகிறது//
Romba azhaga irukku.. unga kavithai..
vazhthukkal.. :)
பொங்கிவரும் அலைகள் மௌனமாகிறது அவள் காலடியில்
nice
:).. :))
நீங்க பாராட்ற அளவுக்கு வளந்திட்டமோ ஆனந்தி
:-))
வருகைக்கு நன்றி ஷஷ்னி
வருகைக்கு நன்றி சிவாஜிசங்கர்
வாவ், அழகான கவிதை!
நல்ல வரிகள்....
@விஜயகுமார் ஐங்கரன்
@:-)
;-)
Post a Comment