அன்று அழகாய் இருந்திருப்பாள்
இன்று அசிங்கமாய் போய்விட்டாள்
வயது முதுமையை நோக்கி நகர
உடலும் தள்ளாட்டம் காண
பார்வையிலே விடை காணா வினாக்கள் நிரம்ப
உள்ள வெறுப்புகள் உதட்டில் நச்சரிப்பாக
ஓயாத புறுபுறுப்பால் பலரைக் குழப்பும்
தன் பிழை உணராத அபலை அவள்
இருப்பது அவள் தங்கை வீட்டில்
தங்கை கணவன் வாய் பேசா ஜீவராசி
வாசியானது அவள் வாழ்க்கைக்கு
வார்த்தையால் பரிதாபப் படுவோர் பலர்
அதுவே அவளை மெல்லக் கொல்லும் விஷம்
வேலைகள் செய்ய மாட்டாள்
வெட்டியே அவள் வேலை
வீண் பேச்சே அவள் தொழில் – ஆனால்
தங்கை பிள்ளைகளை உயிராய் நேசிப்பாள்
தாங்க முடியாத அன்பு – தண்டனையே
புரியா வயதுப் பிள்ளை வார்த்தை
விம்மவைக்கும் அவளை
அவளை சந்தோஷப்படுத்திப் பார்க்க
படைத்தவனுக்கும் தெரியவில்லை போலும்
6 comments:
//வார்த்தையால் பரிதாபப் படுவோர் பலர்
அதுவே அவளை மெல்லக் கொல்லும் விஷம்//.........உண்மைதான் பரிதாபமென்பது கொல்லாமல் கொல்லும் விஷம்தான். நன்றாக எழுதி இருக்கிங்க.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பிரியா.
:-)))
மிகவும் அருமை . வார்த்தைகள் வலியை ஏற்படுத்துகிறது !
கருத்திற்கு நன்றி,பனித்துளி சங்கர்.
பாவம்ங்க......உண்மைதான்.... அவர்களின் நிலைமை இன்னும் பரிதாபமான நிலையிலேயே நம்ம ஊரில் இருக்கிறது.....
சித்ரா அக்கா பாக்கவில்லையே எண்டு கவலைப்பட்டன்,:-)
Post a Comment