Friday, August 20, 2010

புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டும்....

புகைத்தல் உடலுக்கு கேடு,புகைத்தல் புற்றுநோயை உண்டு பண்ணும் என்று அதன் பெட்டியிலே வாசகம் பொறிக்கப் பட்டிருந்தாலும் அதை யாரும் அசட்டை பண்ணுவதில்லை.காரணம் அதன் பக்க விளைவுகள் உடனடியாக வெளிப்படுவதிலை, மற்றும் சினிமா போன்றவற்றில் அதை ஒரு கவர்ச்சிகரமான செயற்பாடாகவும் ,அதன் மூலம் மூளை சுறுசுறுப்படையும் போன்ற போலி எண்ணக்கருத்துக்களையும் விதைப்பதாலுமே ஆகும்.

புகைப்பவர்கள் புகைத்துவிட்டுப்போகட்டுமே என்று அசட்டையாக இருக்க முடியாது.காரணம் புகைப்பவர் அனுபவிக்கும் தாக்கத்தின் அதே அளவு தாக்கத்தை அருகில் இருக்கும் நபரும் பெறுகின்றார்.(அண்மையில் புகைவண்டிப் பயணத்தில் ,புகைத்தவன் எவனோ ஒருத்தன்,ஆனால் இரவு பூராக இருமியவன்
நான்.)

இந்த வீடியோ காட்சியைப்பாருங்கள்,அதன் தாக்கத்தின் கோரம் புரியும்.




பின்குறிப்பு: சத்தியமாய் நான் பண்ணலைங்கோய்................

8 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

புகைபிடிப்பதின் அபாயம் தெரியாமல் பலர் இந்த பலகத்தை கொண்டுள்ளனர்..
புகைபிடிக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ இது...

என்னால் முடிந்த வரை என் புகைபிடிக்கும் பழக்கமுள்ள நண்பர்களுக்கு இதை தெரிவிக்கிறேன்....

Unknown said...

நல்லபடம்... நல்லபதிவு....
நானும் புகை பிடிப்பவன் தான்...(1988 முதல்)
கடந்த இரண்டு ஆண்டுகள் 2006 முதல் 2008 வரை
சுத்தமாக பிடிக்காமல் இருந்துள்ளேன்...
இந்த கால கட்டங்களில் தான் மிகப்பெரிய பண இழப்புகள் ஏற்பட்டது....
புகைப்பிடிப்பதை நான் காரணம் காட்டவில்லை...
எனது வாழ்க்கையில்...நான் புகைப்பிடிக்கும் பொழுது சிந்தித்த விஷயங்கள்....வெற்றி அடைந்துள்ளன...
நான் மீண்டும் புகை பிடிக்க ஆரம்பித்தது 2008 அக்டோபர் 2 லிருந்து தான்...அன்று முதல் தான் புது சட்டம் அமலானது...பொது இடங்களில் பிடிக்ககூடாது என்று...
(இப்போ சூர்யன் எப்.எம் ல விளம்பரம்..நேரம் 10 மணி - சாப்பிட்டீங்கள பான்பராக்)
(எந்திரன் ரஜினிகாந்துக்கு இதை சொல்லுங்க !!! சன் டிவி'ல ஒரு பேட்டின்னு... அவர் என்ன சொல்வார்ன்னு கேட்போம்)
(இது என் தனிப்பட்ட கருத்து...)

Unknown said...

சார் உங்களுக்கு அனுபவம் இருக்கோ !!!!!!!!!!!


நல்ல பதிவு உங்க நான்பர்களுக்கு சொல்லுங்க என்ன தவிர நானு புகை பிடிக்கிறது இல்லையாக்கும் !!

movithan said...

@வெறும்பய

மிக்க நன்றி.
எங்களால் முடிந்த அளவு எமது நண்பர்களை இந்தப் பழக்கத்தில் இருந்து மீட்டல் மிகப்பெரிய சேவையே.கடினமான இலக்கு,ஆனாலும் முயன்றுதான் பார்ப்போமே.

movithan said...

@ஆகாயமனிதன்..

என்ன நண்பரே,புகைப்பிடிக்கத் தொடங்கும்,விடும் திகதிகளை தினக்குறிப்பேடில் குறித்து வைத்தீர்களா?
மிகவும் துல்லிதமாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

ஆனால் நண்பரே,கைவிட்டால் மீண்டும் அதை நினைத்துப்பார்க்கவும் கூடாது.
-அன்புக்கட்டளை-

movithan said...

@A.சிவசங்கர்

பாஸ்,உங்களுக்குத் தெரியாததோ????
3 1/2 வருஷமாக ஒண்ணாத்தானே இருந்தம்.

Chitra said...

Anyone, who watches this video will definitely stay away from cig. yuck!

movithan said...

@Chitra
if it'll be happened,i really so happy.

Post a Comment