Sunday, August 22, 2010

ஹேராம் அன்றும் இன்றும்

பெப்ரவரி 18,2000 ஆண்டு திரையிடப்பட்ட இப்படத்தை நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலாகப் பார்த்ததாக ஞாபகம்.படம் தொடங்கி அரை மணித்தியாலம் கூட பாத்திருக்கமாட்டேன்.காரணம் படத்தின் கதைக்களம் 1940ம் ஆண்டில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தியது,அத்தோடு படம் முழுக்க ஆங்கில வார்த்தைகள்.அவற்றையெல்லாம் விட பிரதான காரணம் எனது பக்குவமின்மை.

அதன் பின் இப்படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம எனக்குத் தோன்றவில்லை.காரணம் முதன் முதலில் பார்க்கும் போது ஏற்ப்பட உணர்வும்,படுதொல்விப்படம் என்று பரவால பகிரங்கப்பட்டதுவும்.
காலப்போக்கில் தோல்விப் படம் என்று கூறப்பட கமல்ஹாசன் படங்களைப் பார்க்கும் போது இந்தப்படம் ஜெய்க்கவில்லையே என்று ஏக்கம் வரும் அளவிற்கு இருந்தது.நேற்றைக்கு முன் தினம் நண்பனுடன் வெட்டியாகப் பேசிக்கொண்டிருக்கும் போது ஹேராம் தோற்பதற்க்கும் மதுரை வீச்சரிவாள்,சண்டியர் படங்கள் ஜெய்ப்பதற்க்கும் என்னடா காரணம்? என்று அவன் சாதாரணமாகத்தான் கேட்டான்.நான்தான் ஹேராம் அரை மணித்தியாலம் பார்த்தவன் ஆச்சே.நான் ஏதாவது சொல்லப்போய் இது கூடப்பார்க்காத நீயெல்லாம் ஒரு கமல் ரசிகன் என்று என்னை கேலி பண்ணுவதற்கு இடம் கொடாமல் பதிலே சொல்லாமல்,வேறு விடயத்திற்கு தாவிவிட்டேன்.
அன்று இரவு ஹேராம் படத்தோடுதான் வீடுவந்தேன்.படம் 202 நிமிடங்கள் என்றவுடனேயே மேட்டர் ரொம்பப் பெரிசு என்று தோணிச்சு.படம் தொடங்கியவுடனேயே இளையராஜாவின் பின்னணி இசை தன் கைவரிசையைக் காட்டத்தொடங்கியது.அந்த வயலின் இசையிலே மனது மயங்கியது.நீ பார்த்த பார்வை “ எனும் பாடலைக் கேட்க்கும் போது இதயம் காதலுக்காய் ஏங்கியது.ராஜா சார் இசையின் ராஜாதான்.




ஒற்றைவரியில் கதையைக் கூறினால் ,கொல்கத்தா கலவரத்திற்கும் தன் மனைவி (ராணிமுகர்ஜி) மரணத்திற்கும் அடிப்படையில் காரணகர்த்தா மகாத்மா காந்தியே என்று ஒரு இந்துத்துவ வாதியால் மனமாற்றம் பெறும் சாகேத்ராம் (கமல்ஹாசன்) அவரைக் கொல்வதை இலட்சியமாய் கொள்கிறார்.ஆனால் காந்தியை நேரடியாகச் சந்தித்த பின் தன் எண்ணம் தவறென உணர்ந்து மனம்திருந்துகிறார்.

இந்தப்படத்தை ஒரு கைற்றில் நடப்பது போன்று கமல் மிக்க அவதானத்தோடு நகர்த்திச் சென்றுள்ளார். இப்படத்திலே சாருக்கான் பேசும் தமிழும் அவரின் நடிப்பும் தத்ரூபம்.

வசுந்தராதாசும் ,ராணிமுகர்ஜியும் கமலுக்கு ஈடுகொடுத்துள்ளனர்.(நடிப்பில் மட்டும்மல்ல....)
இப்படமானது 2000ம் ஆண்டிக்கான  தேசிய திரைப்பட விருதைப்பெற்றுக்கொண்டது.

இந்தப் படத்தை பார்த்து முடித்த போது என்மனதில் தோன்றிய எண்ணம்,
மதத்தை அதிகமாய் நேசிப்பவன்,மனிதனை நேசிப்பதில்லை.மனிதனை நேசிக்கத்தெரியாதவனின் மதம் வன்முறையின் ஆயுதம்.

6 comments:

Unknown said...

உங்க ஆக்கள் ரெண்டு பேரையும் விட மாடிங்க போல (அதான் ராஜா,கமல் )

movithan said...

@A.சிவசங்கர்

அதான் மச்சான்,இரண்டு பேருமே பெரும் திறமைசாலிகள் ஆச்சே.

பத்மநாபன் said...

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் எனக்கு. சுற்றியுள்ளவர்கள் ஒரு தடவயே பார்க்கமுடியவில்லையே என்று புலம்புவதை கேட்டுள்ளேன். நிச்சயமாக அவர்கள் கால் படத்திலேயே எழுந்து போனவர்களாக இருப்பார்கள்..
கமல் சாருக் நட்பு ..கமல் ராணிமுகர்ஜி காதல்..இதெல்லாம் நினைத்தாலே இனிக்கும்.
கடைசியில் காந்தியின் நினைவுகளோடு வரும் கமல் காட்சிகளில் இசை புல்லரிக்கவைத்துவிடும்.
முதலில் விட்டாலும் கடைசியில் அனுபவித்து பார்த்து விட்டீர்கள்...அதை அருமையாக பதிவும் செய்து விட்டீர்கள்.

பத்மா said...

my favourite picture ..thanks for sharing

movithan said...

@பத்மநாபன்

உங்கள் அழகான கருத்திற்கு மிக்க நன்றி.ஒன்றை முழுமையாகப் பார்க்காமல் அது பற்றி விமர்சிப்பது ஏற்புடையதல்ல,என்பதை புரியவைத படம்.

movithan said...

@பத்மா
thanks a lot for yours comments.

Post a Comment