எனக்கு இது முதல் பதிவு.எனவே அறிமுகம் சம்பந்தமான ஒரு பதிவு.
எனக்கு பிடிச்ச அறிமுகத்திலே தமிழ் சினிமாவில் அசத்தியவர்கள்.
- இளையராஜா - அன்னக்கிளி
தமிழனா பிறந்துவிட்டு இளையராஜா இசையை ரசிக்காமல் இருக்க வாய்பில்லை.நாம் தமிழன் என்று பெருமை படுவதிற்கு அவர் தமிழனாக இருப்பதும் ஒரு காராணம் என்பேன்.அவரது திறமைக்கு உரிய கௌரவிப்பு இன்னமும் அவருக்கு முழுமையாக வழங்கப்படவில்லை என்பது நிஜமே.
2. A.R.ரகுமான் - ரோஜா
இளையராஜாவை முதலில் குறிப்பிட்டதால் A.R.ரகுமான் இரண்டாவது இடம் என்று பொருளல்ல.இசை ஞானத்தால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல.ஆஸ்கார் வெற்றிகொண்டதற்கு பிறகும் ஒரு மனிதனால் இத்தனை எளிமையாக இருக்க முடியும் என்றால் அது ரகுமானால் மட்டுமே முடியும்.
3. பாலா - சேது
தமிழ் சினிமா ஒரு தேக்க நிலையை நோக்கி சென்று கொண்டிருந்த வேளை யாருமே எதிர்பார்க்காத ஒரு சினிமாவின் மூலம் இப்படியும் படம் பண்ணலாம் என திரையுலக மேதைகளுக்கே பாடம் கற்பித்தவர்.
ஒரு மனிதனின் ஆழமான உணர்வுகளை இத்தனை நுனுக்கம்மாக படம் பிடிப்பது என்பது அவரின் திறமைக்கு சான்று.
இந்தபட்டியலில் பலர் இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்து தொடந்து அசத்தும் என் அபிமான சினிமா சாதனையாளர்களை குறிப்பிட்டுளேன்.
என் அறிமுகம் எப்படியோ,
என் ஸ்டார்களின் அறிமுகம் அசத்தல் தானே ?
0 comments:
Post a Comment