Tuesday, April 6, 2010

தேவதையின் தரிசனம்

நீண்ட நாளைக்கு பின்பு அலுவலகத்தில் இருந்து நடந்து வீடு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஜீவாவிற்கு.காரணம் அன்றைக்கு அலுவலக வண்டி பழுது.அவனது நண்பன் குணா தன்னோட வரச்சொல்லி கேட்டபோதும் சுரேஷ்ர வீடுதான் தூரம் அவன ஏற்றிசெல்ரா மச்சான் எண்டு மறுத்து விட்டான்.


அலுவலக வாயிலை தாண்டிய பொது அவனது வெயர்வையை உறிஞ்சிசென்ற தென்றலும் மாலை மயங்கிய வண்ண வானமும் அவனுக்கு புத்துயிர் ஊட்டின. கைக்கடிகாரமோ நேரம் 6.30 காட்டியது.வீதியில் வெகு சிலரே சென்றுகொண்டிருந்தனர்.வீதியின் அமைதியில் அவனது மனம் மௌனராகம் பாடிக்கொண்டே வந்தது.
வீதியோரத்தில் நிண்ட ஆலமரத்தை கண்டபோது அதில் சாய்ந்து விட்டு

செல்ல அவனது மனம் ஆசைப்பட்டது .அதற்கு காரணமும் உண்டு. அவனது பால்ய காலத்தை சொல்லப்போனால் இந்த மரத்தின் கதாபாத்திரத்தையும் உள்வாங்கியே ஆகணும். அத்தனைக்கு அவனது இளமை கொண்டாட்டத்துக்கு நண்பர்களோடு நண்பனாக தோள்கொடுத்த ஒன்று.அப்பொழுது அம்மரத்தில் குடும்பம் நடத்தும் பறவைகள்வந்த வண்ணம் இருந்தன.தன் இளமையில் அப்பறவைகளின் முன்னோர்களுக்கு செய்த அநீதியை நினைத்துக் கொண்டு அழையா விருந்தாளியாக மரத்தடியில் நிற்க விரும்பாமல் வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

நடக்கத் தொடங்கியவனுக்கு பின்னால் கேட்டகுரல் திரும்பி நோக்க வைத்தது.திரும்பியவனுக்கு உள்ளெடுத்த சுவாசத்தை வெளிவிட முடியாத ஓர் உணர்வு.


அவளது நேர்த்தியான உடை அலங்காரமும் அம்சமான அழகும் அவனை ஒரு நொடியில் கலக்கிவிட்டது.அவளோ ஒரு மாறுதலும் காட்டாமல் ஒரு சிறுவனை அழைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தாள்.


ரேணிகுண்டா படத்தை பார்த்து விட்டு அதில் வருகின்ற ஹீரோயினை வாய்வலிக்க தன் நண்பர்களுக்கு வர்ணித்தவனுக்கு அச்சுஅசலாக அதே முகச்சாயல் கொண்ட பெண்ணை அதுவும் இத்தனை இனிமையான குரலோடு கண்டதனால் ஜீவா ஒரு நிமிடம் பிரமை பிடித்து நின்றுவிட்டான்.

எது நடந்தாலும் பரவாயில்லை அவளிடம் பேசுவது என்று மனதுக்குள் முடிவு பண்ணிவிட்டு அவளுக்கு சமாந்தரமாக வந்த பொது உதடுகள் பிரியவில்லை, வார்த்தைகள் எச்சிலோடு கரைந்து விட்டன.இதய துடிப்போ எகிறி குதிக்க ஆரம்பித்துவிட்டது.

ஒரு நிமிடம் கண்களை மூடி உதடுகளை அசைத்தவன் ,தன் வறண்ட தொண்டையில் இருந்து “ஹெலோ .... என்றான்.ஹலோ அங்கிள் .. என்று பதில் வந்தது கூட வந்த வண்டுப்பயலிடம் இருந்து.ஓங்கி அவன்ட தலைல கொட்டணும் போல இருந்தது ஜீவாக்கு.ஆனால் அவள் பையனின் தோளில் செல்லமா தட்டினாள்.ஆனால் அவள் வாய் திறக்கவில்லை.

அடுத்து அவளிடம் என்ன பேசலாம் என மூளையை குடைந்து கொண்டு வந்தவனுக்கு தனது வீடு தெரிய யாரவது வீட்டில் இருந்து பார்க்கிறார்களா?

என நோட்டம் விட்டு விட்டு அவளை நோக்கி திரும்பினான். அவளோ தனது வீட்டுக்கு பக்கத்தில் புதிதாக கட்டிய வீட்டு படலையை திறந்து உள்ளே சென்று கொண்டிருந்தாள்.அழுவாத சிரிப்பதா என்று தெரியவில்லை அவனுக்கு.

ஆனாலும் அவளை இனி அடிக்கடி தரிசிக்கலாம் என்ற சந்தோஷத்தில் தன்னை மறந்த ஜீவா தனது அலுவலக சூட்கேசினை ,கிட்டார் மாதிரியில் பிடித்து “ ஓமனப் பெண்ணே ..... என்று சற்று சத்தமாவே பாடிவிட்டான்.

மறதியில் மூடாமல் விட்ட படலையை மூட வந்த அவள் ஜீவாவை பார்த்து சிரித்த சிரிப்பில் தேவதையை தரிசித்து மீண்ட ஜீவா “மோனாலிசா தோற்று விட்டாள் என்று கத்திக்கொண்டே தன் வீட்டை நோக்கி ஓடினான்.

இன்று முதல் அந்த வீதியிலும் ஒரு “ரோமியோ – ஜூலியட் .

0 comments:

Post a Comment