Saturday, April 10, 2010

அன்பின் மாறுபட்ட பரிணாமம்


வேலை விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திருப்பிக்கொண்டு இருந்தேன்,நன்றாக வெளுத்திருந்த வானத்தில் திடீர் என ஓர் மாறுதல்.மின்னல் கீற்றுக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொன்றிமறைந்தன.இடி முழக்கம் வேறு தன் பங்குக்கு பிரமையூட்டியது.

கடை அருகில் ஒதுங்குவமா ? என யோசித்தேன்.ஆனால் IPL மேட்ச் தொடங்க இன்னும் பத்து நிமிடம் தான் இருந்திச்சு.வண்டியின் வேகத்தைச் சற்றுக்  கூடிய போது  வானில் இருந்து வந்த மழைத்துளி என் மூக்கில் பட்டுத்தெறித்தது.மேல இருந்து யாரோ பன்னீர் தெளித்த போன்ற உணர்வு.ஆனால் அடுத்த நொடியே துளிகள் பன்மடங்காக கூடி என்னை முற்றிலும் நனைத்து விட்டது.அந்த வேளை என்னைக்கடந்து சென்ற குளிர் காற்று என்னை சிலிர்க்க வைத்து விட்டுச்சென்றது.
வீட்டை வந்தடையும்  வேளை முழுமையாகவே நனைந்து விட்டேன்.அப்படியே வரவேற்ப்பறைக்குள் பாய்ந்துசென்று “சுருதி..... என்று மனைவியை கூப்பிட்டேன்.எனக்குத் தெரியும் மழையில் நனைந்து விட்டு வந்து வீட்டை ஈரப்படுத்துவிங்க என்று ,அப்படியே நல்ல பிள்ளைபோல வராந்தாவில்நிண்டு தலையை துவட்டுங்கோ எண்டு சொல்லிக்கொண்டே துவாயை என் முதுகில் போட்டு விட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அப்பொழுது இருமிக்கொண்டே எனது சாரனை கொண்டுவந்து எனது கையிலே கொடுத்த அம்மா எனது தலையை துவட்டத் தொடங்கினாள்.மழை தொடங்கவே ,நீ வேலை விட்டு வார நேரம் நனையப்போறியோ என்று கவலையா இருந்திச்சிட்டுடா;ஏன் கொஞ்சம் நிண்டு வந்திருக்கக்கூடாதா?
என்று தன் அன்பைக் கொட்டினாள்.



அந்த நேரம் மனைவி சூடான காபியை கொண்டு வந்து நீட்ட ஏன் அவள் உடனே உள்ளே சென்றாள் என்ற காரணமும் புரிந்தது.அப்பொழுதுதான் மேட்ச் ஞாபகம் வர டிவியை நோக்கி ஓடினேன்.

4 comments:

நிலாமதி said...

சொல்லாமல் சொன்ன கதை ....அழகாய் இருக்கிறது . சூடான காபியும். அம்மாவின் அன்பும் கொடுத்து வைச்ச நீங்க. பாராடுக்கள்.

movithan said...

நன்றி உங்கள் வருகைக்கு.
உங்கள் கருத்தை வரவேற்கின்றேன்.

Kandumany Veluppillai Rudra said...

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்?

movithan said...

வருகைக்கு நன்றி உருத்திரா சார்.

Post a Comment