Friday, April 9, 2010

மனநோயாளி


என் வீடு செல்லும் வழியில் கட்டிடங்கள்,மரங்கள் எப்படி நிலையாக காணப்படுகின்றனவோ அது போன்றே ஒரு மனிதனும். அவ்வீதிக்கு ஓர் அடையாளம்.


வழுக்கை பாதியும் முடி மீதியுமான தலை,சவரம் செய்யப்படாத சீரின்றி வளந்த தாடி மீசை.அதுவே அவனது முகமூடி.கந்தலும் கிளிஞ்சலுமான சாரன் ,பொத்தான்கள் மூடாத அழுக்கேறிய சட்டை.இதுவே அவனது அங்க அடையாளங்கள்.இவை போக அவனது நடையில் ஓர் அபரித வேகம் காணப்படும்.பார்வையும் முடிவில்லாமல் எதையோ தேடிக்கொண்டு இருக்கும்.மூச்சிக்கு ஒரு தடவை எச்சிலை காறி உமிழ்ந்து கொண்டிருப்பான்.அவனை கடந்து செல்கையில் வாந்தியை வரவழைக்கும்  துர்நாற்றம்.இவன்தான் பாபு.
அதிகாலைப்பனியில் ஓர் போர்வை கூட இன்றி தனது சாரத்தினாலே தன்னை மூடிக்கொண்டு தேநீர் கடை வராந்தாவில் அவன் படுத்திருப்பதினைப் பார்த்தால் நமக்கு நெஞ்சு கனக்கும்.கடை திறக்க மட்டுமே அவனுக்கு தூக்கம்.கடை திறக்க டீ மாஸ்டர் பாத்திரத்தை கழுவி அவனிலே வீசி அவனுக்கு திருப்பள்ளியெழுச்சி செய்து விடுவான்.பாபுவும் அந்த கடுப்பை நாள் பூராக கடை வாசலில் உள்ள பூவரசம் மரத்தினிடம் காட்டிக்கொண்டுஇருப்பான்.
கடையில் வேலைகளுகிடையில் அங்கே வேலைசெய்யும் மனவக்கிரகம் பிடித்த ஊழியர்களுக்கு விளையாட்டுப்பொருளும் இந்த பாபுவே.
அவன் புரியாத பாஷா பேசி மிருக ஒலியில் அழுவது அவர்களுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்துவது இறைவனின் படைப்பின் விந்தை.

அவன் தேநீர் கேட்டு சில்லறையுடன் கடைவாசலில் வந்து பிச்சைகேட்கும் போது (பணம் கொடுத்து) கடை உரிமையாளன் அவனை வெளியே போகும் படி அதட்டும் தொனியில் வாசலில் கனவு காணும் நாயே எழுந்து ஓடும்.அத்தனை வன்முறை அத்தொனியில்.வாடிக்கையாளர்கள் குறையும் போது பணம் பெறப்பட்டு தேநீர் விற்கப்படும்,வசைச்சொற்கள் இனாமாக வழங்கப்படும்.

பாடசாலை விட்டுச்செல்லும் சில காடை மாணவர்கள் (மாணவர்கள் என்று சொல்லப்பிடிக்கவில்லை) இரகசிகமாக அவன் மீது கல்லை வீசி அவனை யுத்தத்திற்கு அழைப்பதும்  அவனது பதில் தாக்குதலில் அவ்விடம் களோபறிப்படுவதும் முடிவில் ஒரு பலவான் அவனை அடிப்பதும் வலியின் உச்சம்.
இத்தனைக்கும் சுனாமியின் அகோரத்திற்கு தன் குடும்பத்தை கடலுக்கு தாரை வார்த்துக்கொடுத்தவன் அவன்.அதுவே அவனது மனநோய்க்கான காரணம்.






ஒன்று மட்டும் எனக்கு புரிகின்றது அவன் காறி உமிழ்வது அவனை காயப்படுத்தும் மனிதர்களுக்கு அல்ல.இத்தகைய புத்தியுடைய மனிதனை படைத்த ஒன்றை நோக்கி (கடவுளாகவும் இருக்கலாம்).

6 comments:

Kiruthigan said...

Keep Rocking malgudi
good one post..
joint with tamilsh..

Jerry Eshananda said...

நல்ல தொடக்கம்,வாழ்த்துகள்..

movithan said...

நன்றி cool boy
உங்களுடைய உற்சாகம் மனதுக்கு புதுதெம்பை தருகின்றது.

movithan said...

உங்கள் வருகைக்கு நன்றி ஜெரி ஈசானந்தன் ,
என் போன்ற எழுத ஆரம்பித்தவர்களுக்கு உங்களைப் போன்றவர்களின் உற்சாகம் அவசியம்.கருத்துக்கு நன்றி

ஸ்ரீராம். said...

யூத் ஃபுல் விகடன் 'குட் ப்ளாக்ஸ்' பகுதியில் உங்கள் இந்தக் கட்டுரை....பார்த்தீர்களா..?

http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp

movithan said...

ஸ்ரீராம் சார் ,
ரொம்ப நன்றி.நீங்க சொல்லித்தான் பார்த்தன்.என்னால நம்ப முடியவில்லை.
நீங்க எனக்கு பெரிய கிப்ட் கொடுத்து அசத்திட்டீங்க

Post a Comment