ஹரி வீட்டுக்குள் நுழைந்த போது அவனது தம்பியும் அம்மாவுமாக எதோ ஒன்றைச் சுற்றிநின்று விநோதமாகப் பார்த்துக்கொண்டுநின்றார்கள்.என்ன வென்று தெரியவில்லை.தம்பியை விலத்திவிட்டுப்பார்த்த ஹரிக்கு அதன் தோற்றம் வெறுப்பையே தூண்டியது.ஹரியின் புருவங்கள் உயர்ந்ததையும் வாயின் நெளிப்பையும் நோக்கிய அவனது தாய் “பாவண்டா ! நடு வீதியில கவனிப்பார் யாரும் இல்லாம நிண்டுச்சாம் எண்டு கோகுல் தாண்ட தூக்கிட்டு வந்தான். பாரேன் அதிர முகத்த எவ்வளவு சாந்தமா இருக்கு என்ன “,எண்டு அம்மா சொல்ல ஹரிக்கு கோவம்தான் வந்திச்சு.
“அய்யோ அம்மா இது சரியான நோஞ்சான் நாய்,அழகு என்ற ஒன்று இதற்கு மருந்துக்கும் இல்ல.இதற்குப்போய் இத்தனை சிபாரிசு பண்றியே” என்று வெறுத்திட்டே சொன்னான் ஹரி.
“நீ கூடத்தான் அழகில்லை அதற்காக அம்மா உன்னில அன்பு காட்டலையா?“என்று கேட்டுட்டே அம்மாவிற்கு பின்னாடி ஒளிச்சான் கோகுல்.கொகுலைப் பார்த்து முறைத்த அம்மா “ஹரி இந்த நாயிக்கு வைக்க நல்ல பெயர் ஒண்டு சொல்லண்டா ? “ என்றார்.வேண்டா வெறுப்புடன் “பராக் ஒபாமா எண்டு வையுங்களேன்” என்றான். உடனே கோகுல் நல்ல பெயர் தான் அண்ணா ,ஆனால் வெளி ஆட்கள் கேட்டா சிரிபாங்களே.எண்டாலும் பரவாயில்லை அண்ணா வச்ச பெயர் மாற்ற ஏலாது.hey puppy, here after your name is barack obama என்றான்.ஐயோ நீங்க பெயர் வச்சது போதும்,நானே வைக்கிறேன் எண்டு சொல்லி “ரெமோ “சூப்பரா இருக்குதே என்றார்.
நாய் கருப்பு ஆனா பெயர் வெள்ளையாம்,நான் இதை கூப்பிடையும் மாட்டன்,சோறும் வைக்கவும் மாட்டன்,என்று சொல்லிட்டே ஹரி உள்ள போய்விட்டான்.அம்மா ஹரிக்கு ரெமோவ பிடிக்காத படியா அவன் இதுக்கு அடிப்பானோ தெரியா எண்டு சொன்ன கொகுல்ட் அவன் அப்படியெல்லாம் பண்ண மாட்டன்,போகப்போக அவனுக்கும் பிடிச்சிரும் என்றார் அம்மா.
அன்றையில் இருந்து ரெமோவிற்கு வீட்டில் ராஜ உபசாரம்.காலைலே சீனியற்ற பால்.அதை அம்மாவும் கொகுலும் மாறி மாறி துணி திரித்து பருக்குவார்கள்.அதற்கு பின்னரே ஹரிக்கு காப்பி கிடைக்கும்.மதிய உணவும் முதல் பந்தி ரெமோ தான்.இரவில் ஆறு மணிக்கே இரவுச்சாப்பாடும் வழங்கப்பட்டு விடும்.இதற்காக ஹரி அப்பாவிடம் தனது அதிருப்தியை வெளியிட ,அப்பா கேட்டார் உனக்கு ஏண்டா அதப்பிடிக்கல்லை?
அது அழகில்லையே,எண்ட நண்பர்கள் எல்லாம் நல்ல சாதி நாய் வழக்கின்றாங்க என்றான்.மனிதனுக்கே சாதி பார்க்கின்றது அசிங்கம் என்று பெரியார் சொல்லிஇருக்கின்றார்.நீ போய் நாயிக்கு பார்கின்றாயே,நாய் வளர்க்கின்ற அழகுக்கு இல்லை,காவலுக்கு புரிஞ்சுதா? என்றார்.ஹோலில் மாட்டி இருந்த பெரியார் படமும் அதை அமோதித்த போல் இருந்தது ஹரிக்கு.
ஒரே துடினமாக காணப்படும் ரெமோ இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் படுத்துக்கொண்டு இருந்தது.அதைப் பிடிக்காவிட்டாலும் அது நோயாளி போல் இருப்பது ஹரிக்கு ஏதோ பண்ணியது.அம்மாவிடம் போய் கேட்டான்.அவரும் வேதனையாக நேற்றில் இருந்து ஒண்டுமே சாப்பிடுது இல்லை என்று வெதனையோடே சொன்னார்.
ரெமோ வீட்டு வாசலில் படுத்திருந்தது.ஹரி ஓடிப்போய் ரெமோவை கிட்ட நின்று நோக்கினான்.அது மிகவும் சொர்வாகப் படுத்திருந்தது.மெதுவாக மூச்சுக்காற்று மட்டும் உள்ளே வெளியே பிரயாணித்துக்கொண்டிருந்தது.முதல் முறையாக ஹரி “ரெமோ” என்று கூப்பிட்டான்.ஒரு அசைவும் இல்லை.அப்பொழுது படலையில் கல் விழுந்த சத்தம் கேட்டதுதான் தாமதம் மிகவும் சிரமப்பட்டு எழுந்த ரெமோ மெதுவாக நடந்து படலை வரைச்சென்று நீர் வற்றிய தன் தொண்டையால் இரண்டு தடவை குரைத்தது.பின் மெதுவாக நகர்ந்து வந்து தனது முன்னைய இடத்தில் படலையை நோக்கிய படி படுத்தது.ஹரிக்கு தொண்டை வரை ஏதோ கட்டிக்கொண்டு வந்ததை உணர்ந்தான்.கண்கள் முட்டிக்கொண்டு நின்றன.கை உரோமங்கள் சிலிர்த்து நின்றன.அழகில்லாத நாய் தான்.ஆனால் எத்தனை உண்மையான விசுவாசி.
சித்திரை வருடத்துக்கு என அவனது மாமா முன்கூட்டியே கொடுத்த பணத்தை எடுத்து தனது உள்ளங்கைக்குள் பொத்திய படி நாயை நெஞ்சோடு அனைத்துத்தூக்கியபடி “அம்மா ரெமோவை டாக்டர்கிட்ட காட்டிட்டு வாறன்” என்று கத்திக் கொண்டே சிட்டாய்ப்பறந்த மகனை வினோதமாய் பார்த்தாள் அந்த அன்பான அம்மா.
1 comments:
dear mugamoody,
thanks for visit my page and your sweet comments
Post a Comment