Saturday, April 17, 2010

சார்லி சாப்ளின்


நேற்று சார்லி சாப்ளின் அவர்களின் பிறந்த தினம்.உலக சினிமா எனும் பாதையில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் பயணித்தார்கள் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அவர்களில் சார்லி சாப்ளின் அவர்களின் பாதச்சுவடே இன்றும் தெளிவாகத் தெரிந்து கொண்டிருகின்றது என்பது அவரின் சாதனையின் வெளிப்பாடே.ஒரு கருத்திற்கு உலக சினிமாவை திரைப்படமாக எடுத்தால் அதில் நகைச்சுவை நடிகராக சார்லி சாப்ளின் அவர்களையே தெரிவு செய்யவேண்டும்.
1889 ம் ஆண்டு 16 ம் திகதி இரவு 8 மணிக்கு அந்த அழகிய புன்னகை ஹென்னா என்ற ஏழையின் வயிறில் இருந்து பூமியை வந்தடைந்தது.

குடிகாரத் தந்தை அவரது தாயை விட்டுபிரிந்து சென்றமை அவருக்கு குழந்தைப் பருவத்திலையே வறுமையின் வலியை கற்பிக்க ஆரம்பித்தது.மது விடுதியில் பாடுவதே அவரது தாயின் தொழில்.அதுவும் காலப்போக்கில் அவளை கைவிட்டது. சார்லி சாப்ளினின் அவர்களின் முதல் கலையுலக அறிமுகமும் அதே மது விடுதியில் தான்.தனது ஆறு வயதில் தாய் தொண்டை கட்டி பாடமுடியாமல் அவமானப்பட்டுக் கொண்டு நிற்கையில் யாருமே எதிர்பார்த்திராத வண்ணம் மேடை ஏறிய அந்த குழந்தையின் வினோத நடனம் போதையில் இருந்தவர்களையும் விசில் அடிக்க வைத்தது.
அவமானங்கள் இல்லாமல் வெகுமானம் இல்லை என்பதற்கு சாபிளின் வாழ்கை நல்லதொரு எடுத்துக்காட்டு.சிறு வயதிலையே அளவுக்கு மீறிய வலிகள்,தாழ்வு எண்ணங்கள் பின்னாட்களில் அவர்களை மற்றவர் முன்னிலையில் தன்னை முக்கியம் உள்ளவனாக காண்பிக்க முயலும்.இதற்கு ஹிட்லர் மட்டும் அல்ல சாப்ளினும் சிறந்த உதாரணமே.
பசிக்கின்ற குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதற்கு முடியாத அந்த தாய் மேற்கொண்ட தந்திரம் கதை கூறி உறங்கவைப்பது.அந்த தாயின் மனவெழுச்சியில் வந்த கதைகளே பின்னாளில் உலகையே கட்டிப்போட்ட
“The kid”, ”Modern times”, ”City lights”, “circus” போன்ற சாப்ளினின் படங்களின் கரு.


வறுமையும் பசியும் வலி என்றால் தாயின் பிரிவு அதை விட மேலான வலி என்பது அனுபவித்த ஒவ்வொரு ஜீவனுக்கும் தெரியும்.அந்த வேதனையும் சாபிளினுக்கு கிடைத்தது.அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் அவனது அண்ணன் சிட்னி. சாப்ளின், சிட்னி இருவருக்கும் தாய் ஒன்றே தவிர தந்தையர் வேறானவர்கள்.ஆனாலும் அவன் சாப்ளினுக்கு இறுதி வரை தாயாகவே இருந்தான்.
பிள்ளைகளை பிரிந்த அந்த தாய் பைத்தியமாக மாறியமையும் அந்நியர் போல் தந்தை வீட்டில் நடத்தப்பட்டமையும் சாப்பிளினுக்கு பிறர் வலியை கற்றுக்கொள்வதை இலகு படுத்தியது.
வாழ்க்கைச் சக்கரம் துன்பத்தை மட்டும் கொண்டது அல்லவே.நாடகக் கம்பெனியில் இணைந்து கொண்டபின் அவர் முன்னேற்றத்தை நோக்கி நகரத்தொடங்கினார்(தொழில் ரீதியாக).
வாலிப வயதில் எண்ணங்களின் சுனாமியாக வரும் காதல் அவருக்கு விதிவலக்காக இருக்கவில்லை.அவர் காதல் கொண்டது ஹெட்டி எனும் பாலே நடன தாரகை மீது.ஆனால் அந்த காதல் தோல்வியிலே முடிந்தது.பின்னாளில் சாப்ளின் பலரை மணந்த போதும் யாரும் ஹெட்டியின் வெற்றிடத்தை நிரப்பவில்லை.
இழப்பதற்கு துணிச்சல் உடையவனே பெறுவதற்கு தகுதி உடையவன்.போராட்டம் கண்டு பின்வாங்காமல் முட்டி மோதியவனே வெற்றியாளன்.அத்தகைய வெற்றியாளனே சாப்ளின்.
சாப்ளின் படங்களில் என்னை கவர்ந்த விடயங்கள் பல.அவற்றில் ஒன்று இளைத்தவன் பலவானை புத்தியால் ஜெயிப்பது.இதை அவர் திரையில் காண்பிக்கும் அழகு அபரிதம்.அவரது படங்களில் நகைச்சுவை மாத்திரம் இராது.ஒரு ஆழமான செய்தி மின்னிக்கொண்டே இருக்கும்.அவர் திரையில் எப்படி தனது குள்ள உருவத்தோடு பலவான்களோடு போரிட்டாரோ அதே போன்று நிஜத்திலும் அமெரிக்கா அரசாங்கத்தின் முதலாளித்துவ கருத்தை திரை மூலம் சாடினார்.இதுவே அமெரிக்கா அரசாங்கம் அவரை நாடு கடத்த காரணமாய் இருந்தது.
சாபிளின் வாழ்கையில் விநோதங்களுக்கு பஞ்சமே இருக்கவில்லை.அவரது திருமனவாழ்க்கையை நோக்கினால் 28 வயதில் 16 வயது மில்ரெட் ஹரிஸ் , 34 வயதில் 15 வயது லிட்டா கிரே, 46 வயதில் 16 வயது பவுலட் கொடார்ட் என தொடர் திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றுக்கொண்டார்.கடைசியாக தனது 53 வயதில் திருமணம் செய்த ஊனா என்பவருடனே மரணம் வரை வாழ்ந்தார்.

பின்னாளில் பணம் போதும் போதும் என்றளவு சேர்ந்த போதும் மனதில் ஒரு ஏக்கம் நிரந்தரமாக அவரை பின்தொடந்த போதும் தான் உள்ளத்திற்குள் அழுதுகொண்டே உதட்டால் புன்னகைத்து உலகையே வயிறு குலுங்கவைத்தவர் சாப்ளின்.இந்த சாதனையை அவர் செய்தது தன் உடல் மொழியாலே.
உலகில் அவதரித்த விஞ்ஞானிகளிலே தலை சிறந்தவர் என போற்றப்படும் சார்.ஐன்ஸ்டீனே “என்னைப் போன்ற விஞ்ஞானிகளை விட சாப்ளினே உயந்தவர்” என பகீரங்கமாக பத்திரிகைக்கு பேட்டியளித்தார்.
 சாப்ளின் முதல் முதலாக 1940ல் வெளிவந்த “The great defector “ ல் பேசி நடித்தார்.இப்படத்தின் இறுதிக்காட்சியில் அவர் பேசிய வசனமே ,இது வரை வெளிவந்த திரைப்படங்களில் பேசப்பட்ட வசனங்களில் உயர்வானதாக போற்றப்படுகிறது.
1972 ம் ஆண்டு தன் 82வது வயதில் தள்ளாடி வந்து ஆஸ்கார் விருது (வாழ்நாள் சாதனையாளர்) பெற்ற அந்த சாதனையாளர் 1977ல் ஒரு கிருஸ்துமஸ் தினத்தில் உலக மக்களின் கண்ணீராக பூமியில் கரைந்தார்.

5 comments:

Jayadev Das said...

//பின்னாளில் பணம் போதும் போதும் என்றளவு சேர்ந்த போதும் மனதில் ஒரு ஏக்கம் நிரந்தரமாக அவரை பின்தொடந்த போதும் தான் உள்ளத்திற்குள் அழுதுகொண்டே உதட்டால் புன்னகைத்து உலகையே வயிறு குலுங்கவைத்தவர் சாப்ளின்.// அந்த ஏக்கம் என்ன?

movithan said...

@Jayadeva

மிகவும் காலம் கடந்து வந்த பின்னூட்டம்.நண்பரே,இந்த சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பில் அவர் கடந்து வந்த வாழ்க்கைப்பயணம் எத்தகைய போராட்டமும்,துன்பமும் நிறைந்தது என்று தெளிவாக வெளிப்படுத்தியுள்ளேன்.

அவரது தொடர்ச்சியான திருமணங்களின் தேவையும் அதை புரியவைக்கிறது.
நான் ஏக்கம் என்று குறிப்பிட்டது உண்மையான அன்புக்காக ஏங்குவதையுமே.

கருத்திற்கு நன்றி.

ராஜகோபால் said...

மேலும் சில சார்லி சாப்ளின்
பற்றிய தகவல்கள்

http://gundusbooks.blogspot.com/2011/02/blog-post_9672.html

Jayadev Das said...

\\சாப்ளின் முதல் முதலாக 1940ல் வெளிவந்த “The great defector “ ல் பேசி நடித்தார்.\\ படத்தின் பெயர் “The great dictator “ ஆ?

Unknown said...

@Jayadev Dasசுட்டிக்காட்டியதற்கு நன்றி.தவறுக்கு வருந்துகிறேன்.

Post a Comment