Thursday, April 29, 2010

காதல் பிரிவு .....(கவிதை)


அன்று மார்கழி மாத பின்நேரம்
அங்கொன்றும் இங்கொன்றுமாக கருமேகம்
ஆசையாய் தழுவியது கூதல் காற்று
ஆனாலும் ஏற்க மறுத்தது என மனசு
 
இதயம் பூரா நிறைந்திருந்த என்காதல்
இயக்கம் அற்றுப்போய் விட்டதே
ஈ அவளை தீண்டினாலும் வலிக்கும் எனக்கு
ஈவிரக்கம் இல்லாதவன் அல்லவா கணவன் ஆகிறான்
உள்ளத்தின் அன்பை உதட்டால் உணர்த்தத்தெரியவில்லை
உண்மைகள் அவளுக்கு புரியவும் இல்லை

ஊமையாய் அழுகிறேன்
ஊஞ்சலில் அவள் அவனுடன்
என்ன காரணம்
எனக்கு வேலையில்லை
ஏவல் செய்வதே அவன் வேலை
ஏற்ற கணவன் அவன் என்கிறாள் அவள்
ஐக்கியம் ஆகிறதே அவன் உறவு
ஐயோ அவள் எனக்கு கிடைக்க மாட்டாளா?

ஒருத்தியே என் மனதில்
ஒடிந்தாலும் விட மறுக்கிறது முட்டாள் மனசு
 ஓருயிராய் இருப்போம் என்றாயே
ஓடிவிட்டாயே பணம் என்றவுடன்
            (நான்)

    
(அவள்)              (அவன்)

.................ஆயுத எழுத்து......................... 

 (என்னுடைய கன்னி முயற்சி.பிறரின் உற்சாகமே எழுத்தின் ஆர்வத்தை அதிகரிக்கும்.உங்கள் கருது என்னைச்சீர்படுத்த உதவும். )

8 comments:

Chitra said...

////உள்ளத்தின் அன்பை உதட்டால் உணர்த்தத்தெரியவில்லை
உண்மைகள் அவளுக்கு புரியவும் இல்லை///

....உண்மை காதலனின், ஊமை உள்ளத்தின், உண்மையான உணர்வுகளை உள்ளபடி உரைக்கும் கவிதை. :-)

movithan said...

:-) ----- :-(
கவிதை போன்ற கருத்துக்கு நன்றி

அமைதி அப்பா said...

//ஊமையாய் அழுகிறேன்
ஊஞ்சலில் அவள் அவனுடன்
என்ன காரணம்
எனக்கு வேலையில்லை//

நல்ல வரிகள்.

movithan said...

எனக்கு கவிதை சரிப்படுமா என பயந்தேன்.இப்ப பயம் குறைஞ்சிடுச்சு.
நன்றி அ.அப்பா

கஸ்ரோ said...

well done bro welcome

movithan said...

welcome Castro

தமிழ் மதுரம் said...

இயல்பு நடையில் நன்றாக எழுதியுள்ளீர்கள் நண்பா. தீட்டத் தீட்டத் தான் உளியும் கூர்மையாகும் என்பது போல இன்னும் நிறைய எழுதுங்கள். கவிதைகள் மழையாகப் பொழியிம் உங்கள் வாழ்விலும்.

movithan said...

வருகைக்கும் வளமான கருத்திற்கும் நன்றி கமல்.

Post a Comment